முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலூர் பழனிசாமியின் மகன் அராஜகம் கோவையில் ஜெயலலிதா

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

கோவை, அக்.- 15 - தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ்பாரிக்கு கோவை மாநகராட்சி மேயர் வெங்கடாசலம் கைப்பாவையாக செயல்பட்டார் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கோவையில் நடந்த அ.தி.மு.க. பிரச்சார கூட்டத்தில் பேசினார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 தேதிகளில் இருகட்டமாக நடக்கிறது. இதனையொட்டி தமிழக முதல்வர் ஜெயலலிதா அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் தூத்துகுடியில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தை துவக்கினார். நேற்று சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். ஈரோட்டில் இருந்து பிரச்சாரத்தை முடித்து விட்டு ஹெலிகாப்டர் மூலம் திருப்பூர் வந்தார். அங்கு இருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். கோவை ஸ்டேன்ஸ் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் நேற்று மதியம் வந்து இறங்கினார். பின்பு, கார் மூலம் நஞ்சப்பாரோடு 100 அடி ரோடு வழியாக பொது கூட்டம் நடக்கும் சிவானந்த காலனிக்கு சென்றார். அங்கு வேனில் இருந்தபடி, கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் செ.ம.வேலுச்சாமி மற்றும் 100 வார்டுகளில் போட்டியிடும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசிதாவது:​- கடந்த ஐந்து ஆண்டு காலத்தல், பெரும்பாலான உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க-வினரே இருந்தனர். அனைத்துத் திட்டங்களிலும் ஊழல் தலைவிரித்து ஆடியது. இவர்கள், உங்களை முன்னேற்றம் அடையச் செய்வதற்குப் பதிலாக தங்களை முன்னேற்றிக் கொண்டனர். கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக காங்கிரஸ் வசம் தான் இருந்து வந்தது. இருப்பினும், திமுக முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியின் மகனுடைய கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இவர் வைத்தது தான் சட்டம். இவருடைய கைப்பாவையாகத் தான் மேயர் செயல்பட்டார். தங்களுடைய தேவைகளை கவுன்சிலர்கள் நிறைவேற்றிக் கொண்டார்களே தவிர உங்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும், செய்து தரவில்லை. கவுன்சிலர்கள் என்றாலே, உங்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு தான் இருந்தது. அந்த அளவிற்கு திமுக-வினர் வெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டனர். உங்களை மொத்தத்தில். நீங்களும் வளர்ச்சி அடையவில்லை, இந்த கோயம்புத்தூர் மாநகராட்சியும் வளர்ச்சி அடையவில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் உங்களுடனேயே இருந்து உங்களின் குறைகளை தீர்ப்பவர்களாக, உங்களின் தேவைகளை நிறைவேற்றுபவர்களாக விளங்குவார்கள், உங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள் என்ற உறுதியை உங்களுக்கு நான் அளிக்கிறேன்.
உங்களின் முக்கிய கோரிக்கைகளான,
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இரண்டாவது பில்லூர் குடிநீர் திட்டம் மற்றும் கவுண்டம்பாளையம்-வடவள்ளி கூட்டுக் குடிநீர்த் திட்டம்.
பாதாள சாக்கடைத் திட்டத்தினால் பழுதடைந்த சாலைகளை செப்பனிடுதல்.
குப்பை கூளங்களை அகற்றி சுகாதார வசதிகளை மேம்படுத்தும் வகையில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தினை விரைந்து செயல்படுத்துதல்.
போக்குவரத்து நெரிசாலை சீர்செய்யும் வகையில், பாலங்கள் சுரங்கப் பாதைகள் அமைத்தல்.
கோவை மத்திய பேருந்து நிலையத்தை விரிவாக்கும் திட்டம்.
உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம்.
வன விலங்குகள் பூங்காவினை விரிவுபடுத்தும் திட்டம் ஆகியவை நிறைவேற்றித் தரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து ஆராய்த்து அவற்றை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தத்தில், ஒரு நேர்மையான, திறமையான, தூய்மையான, ஒளிவு மறைவற்ற, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக் கொண்ட ஒரு நிர்வாகம் செயல்படும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எறிவதற்கான நல்ல சந்தர்ப்பம் உங்களுக்கு தற்போது கிடைத்துள்ளது. இந்தப் பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு, கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்புச் சகோதரர் செ.ம.வேலுசாமி அவர்களுக்கும், மாநகராட்சி மாமன்ற உறுப்பனர் பதவிகளுக்கு போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அனைவரையும் மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை எல்லாம் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டல மக்களாகிய நீங்கள் கழகத்திற்கு 100 சதவீத வெற்றியை அளித்து வரலாற்றுச் சாதனையை படைத்தீர்கள்.
அதே போன்று, உள்ளாட்சித் தேர்தலிலும் மீண்டும் ஒரு திருப்பு முனையை நீங்கள் உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அதை நிச்சயம் செய்வீர்கள் என்ற நம்பிக்கையினை தெரிவித்து கொள்கிறேன்.
உங்கள் நலனுக்கு எதிராக நடந்து கொண்ட தி.மு.க. உள்ளாட்சி பிரதிநிதிகளை தூக்கி எரிவதற்கான நல்ல சந்தர்ப்பம் இப்பொழுது உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த பொன்னான வாய்ப்பினை நீங்கள் தவறாமல் பயன்படுத்தி கொண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் கழக வேட்பாளர் அன்பு சகோதரர் செ.ம.வேலுசாமி அவர்களுக்கும், கழக மாமன்ற வேட்பாளர்களுக்கும் உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்
இவ்வாறு பேசினார்.
முதல்வர் ஜெயலலிதா பிரச்சாத்தின் போது தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டமன்ற உறுப்பினர்கள் தா.மலரவன், சின்னச்சாமி, ஓ.கே.சின்னராஜ், செ.தாமோதிரன், முத்துகருப்பண்ணசாமி முன்னாள் அமைச்சர் ப.வெ.தாமோதிரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்