முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கிறார் அன்சாரி

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக். - 15 - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வரும் 28 ம் தேதி நடக்கவிருக்கும் காமன்வெல்த் அரசுகளின் தலைவர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி கலந்து கொள்கிறார்.  காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா இந்த தகவலை தெரிவித்தார்.  பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் மாநாட்டை நடத்தும் ஆஸ்திரேலியா விரும்பும். எனினும் சில முக்கியமான பணிகள் இருப்பதால் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. காமன்வெல்த் நிகழ்வுகளில் இந்தியா மிகவும் ஆர்வமாக பங்கெடுத்து கொள்கிறது. தேர்தல் அமைப்புகளை உருவாக்குவதில் இந்தியாவின் பணி சிறப்பானது. பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கு இந்தியா உதவியாக இருந்திருக்கிறது.  வரும் காமன்வெல்த் மாநாட்டில் இரு முக்கிய அறிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருக்கின்றன. காமன்வெல்த் அமைச்சர்கள் நிலையிலான நடவடிக்கை குழுவும், முக்கிய நபர்கள் அடங்கிய மற்றொரு குழுவும் இந்த அறிக்கைகளை உருவாக்கி உள்ளன. பருவநிலை மாற்றம் தொடர்பான விவாதங்கள், பெர்த் மாநாட்டில் முக்கிய இடம்பிடிக்கும். காமன்வெல்த் அரசு தலைவர்களின் அடுத்த மாநாடு இலங்கையில் நடக்கவிருக்கிறது. அதன் பிறகு 2015 ல் மோரீஷஸ் நாட்டில் நடக்கும் என்றார் சர்மா. 

சண்டிகரில் உள்ள காமன்வெல்த் இளைஞர் மையத்தை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். அடுத்த ஆண்டில் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகவும் சர்மா தெரிவித்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்