முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி 11வது வார்டு அதிமுகவேட்பாளர் டி.முருகேஸ்வரி வாக்குறுதி

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,அக்.- 15 - என்னை கவுன்சிலராக வெற்றி பெற செய்தால் சுகாதார பணிகளுக்கு உடனடி தீர்வு காண்பதுடன் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தருவேன் என்று 11 வது வார்டு அதிமுக வேட்பாளர் டி.முருகேஸ்வரி பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.    மதுரை மாநகராட்சி தேர்தலில் 11 வது வார்டு அதிமுக வேட்பாளராக டி.முருகேஸ்வரி போட்டியிடுகிறார். பிபிஏ பட்டதாரியான முருகேஸ்வரியின் கணவர் பஜார் வி.துரைப்பாண்டி 11 வது வட்ட கழக செயலாளராக உள்ளார். இவர் 11 வது வார்டு பகுதி முழுவதும் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்து வருகிறார். அப்போது வேட்பாளர் டி.முருகேஸ்வரி வாக்காளர்களிடம் அளித்த வாக்குறுதிகள் வருமாறு,  தமிழக முதல்வர் அம்மா அவர்கள் அறிவித்துள்ள விலையில்லா அரிசி,மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மாணவ,மாணவிகளுக்கு லேப்டாப் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளையும் உங்கள் வீடு தேடி கொண்டு வந்து சேர்ப்பேன். நமது வார்டில் சாலைவசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, சிமெண்ட்சாலைகள் அமைத்தல் போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுப்பேன். மேலும் சுகாதார பணிகளுக்கு உடனடி தீர்வு காண்பேன். புட்டுத்தோப்பு மைதானம், மேலஅல்லி தோப்பு முழுவதும் சிமெண்ட் சாலைகள் அமைப்பேன். காட்டுநாயக்கன் காலனியில் நவீன வசதியுடன் பொது கழிப்பறை வளாகங்களை கட்டி தருவேன். செக்கடி தெருவில் பாதாள சாக்கடையை சரி செய்து சிமெண்ட் ரோடு அமைத்து தருவேன். மெஜூரா கோட்ஸ் கர்டர் பாலத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை வடிகால் அமைத்து வைகை நதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுப்பேன். நமது வட்டத்தில் படித்துள்ள பெண்களுக்கு வேலை வாய்ப்பு முகாம்களை மாதம்தோறும் நடத்தி வேலை வாங்கி தருவேன். மேலும் ஒவ்வொரு மாதமும் பொது மருத்துவ முகாமை நடத்தி அனைவரும் முழு சுகாதார வசதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். முக்கிய இடங்களில் சமுதாய கூடங்களை கட்டித்தருவேன். புட்டுத்தோப்பு சிவன்கோவில் பகுதியில் நல்ல தண்ணீர்குழாய் ஆழ்துளை கிணறுகள் மூலம் அமைக்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் இணைப்பு கிடைக்க ஏற்பாடு செய்வேன். உள்ளாட்சியிலும் அம்மாவின் நல்லாட்சியை அமைக்க எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
   இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-----------

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்