முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல்பாதுகாப்பு பணிக்கு 80,000 போலீசார்-டி.ஜி.பி.தகவல்

சனிக்கிழமை, 15 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, அக்.- 15 - தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 80 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் கூறினார். தேர்தல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதன்பிறகு தமிழக போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும் சுதந்திரமாகவும்  நடத்தும் விதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலில் போலீசாரை தவிர வனத்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களைத்தவிர கர்நாடகா, கேரளா, மராட்டியம் மாநிலங்களில் இருந்தும் 3,500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். மத்திய சிறப்பு பாதுகாப்பு படையை இதுவரை கேட்கவில்லை.  17ம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலுக்கு 80,000 போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தமிழ்நாட்டில் 10 சதவீதம் வாக்குச்சாவடிகள் பதட்டம் நிறைந்ததாக கருதப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமிரா வைத்து கண்காணிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே, மாநகராட்சி தேர்தல் அதிகாரியான கமிஷனரும், தேர்தல் ஆணையமும் முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்வார்கள்.
இவ்வாறு போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் கூறினார். சென்னை மாநகர கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சென்னையில் மட்டும் 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். 1,600 பூத்துகளை பதட்டம் நிறைந்தவைகளாக கண்டறிந்துள்ளோம். அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் சென்னையில் பலத்த பாதுகாப்பு போடப்படும் என்றும் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்