முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத்தில் இரு பிரிவினர் மோதல்: 10 பேர் கைது

செவ்வாய்க்கிழமை, 18 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

நர்மதா, அக்.18 - குஜராத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் நர்மதா நகரில் பிட்டிலா என்ற பகுதியில் சிறு பிரச்சனை தொடர்பாக இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினரும் கூரிய ஆயுதங்களை கையில் ஏந்தியபடி அந்தப் பகுதியில் உள்ள ரோட்டில் எதிரும் புதிருமாக கலவரத்தில் ஈடுபட்டனர். ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொண்டனர். மேலும் சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீதும் கற்களை வீசி தாக்கினார்கள். சில கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்டன. இந்த வன்முறை கும்பலை கட்டுப்படுத்த போலீசார் தடியடி பிரயோகமும், கண்ணீர்ப்புகை குண்டு வீச்சும் நடத்தினர். இந்த கலவரம் மற்றும் வன்முறையில் ஒரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு பிரிவுகளையும் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கலவரம், தீவைப்பு, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த கலவரம் மேலும் பரவாமல் தடுக்க அந்த பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!