முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கோயிலுக்கு இந்தியா நிதியுதவி

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

கொழும்பு, அக். 19 - இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உல்ள திருக்கேத்தீஸ்வரம் கோயிலின் புணரமைப்பு பணிகளுக்கு ரூ. 13.65 கோடி உதவி வழங்க இந்தியா உறுதியளித்திருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் கே. காந்தாவும், திருக்கேத்தீஸ்வரம் கோயில் புணரமைப்பு குழு தலைவர் கைலாச பிள்ளையும் இலங்கையின் பொருளாதார மேம்பாட்டுக்கான அமைச்சர் பசில் ராஜபக்சே முன்னிலையில் கையெழுத்திட்டனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அகதிகள் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்த போது வெளியிடப்பட்ட கூட்டு பிரகடனத்தில் இந்திய அகழ்வாராய்ச்சி அமைப்பு, மகாபலிபுரத்தில் உள்ள கட்டிட மற்றும் சிற்ப கலை கல்லூரி ஆகியவற்றின் உதவியுடன் திருக்கேத்தீஸ்வரம் கோயிலை புணரமைப்பது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!