முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நிலச்சரிவு: 60 பேர் உயிரிழப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

சான் சால்வடார், அக். 19 - அமெரிக்காவில் கனமழை, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களினால் கடந்த சில நாட்களில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு எல் சால்வடாரில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 9 பேர் பலியானார்கள்.  கெளதமாலா அருகே வில்லாகானல்ஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை ஏசர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவில் பரவலாக பெய்த வரலாறு காணாத மழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் மெதுவாக நடைபெறுகின்றன. 

காணாமல் போனவர்களை தேடும் பணியும் தாமதமாகியுள்ளதாக மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிக்ரகுவா பகுதியில் 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்