முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபை 2-வது நாளாக ஒத்திவைப்பு

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,அக்.19 - கேரள சட்டசபையில் நேற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டதால் சபை 2-வது நாளாக ஒத்திவைக்கப்பட்டது. கேரள சட்டசபை சபாநாயகர் ஜி.கார்த்திகேயனை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக இடது கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் டி.வி.ராஜேஷ், ஜேம்ஸ் மாத்யூ ஆகியோர் சபையில் இருந்து 2 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சபையை நடத்த முடியாததால் நேற்றுமுன்தினம் சபை ஒத்திவைக்கப்பட்டது. நேற்றுக்காலையில் சபை வழக்கம் போல் கூடியது. சபை கூடியதும் 2 உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை நீக்கக்கோரி இடது கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் சபையின் மத்திய பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சபாநாயகர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சபையை சத்தியாகிரகப்போராட்ட இடமாக மாற்றக்கூடாது என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். அதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொருட்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சபாநாயகர் கார்த்திகேயன், கேள்வி நேரம், கேள்வி நேரத்திற்கு பின்னர் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு 2022-2012-ம் ஆண்டுக்கு 3 துறைகளுக்கான மான்ய கோரிக்யை ஓட்டெடுப்புக்கு விட்டார். பின்னர் சபை ஒத்திவைத்தார். சபை கூடியதும் 10 நிமிடங்களுக்குள் இத்தனையும் நடந்துவிட்டது. அதோடு மட்டுமல்லாது 2 உறுப்பினர்களின் சஸ்பெண்ட்டையும் ரத்து செய்தார். இதனையொட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்தை கைவிட்டனர். இன்றுமுதல் சபை அமைதியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!