முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யு.எஸ். வால் ஸ்ட்ரீட் போராட்டம் வலுக்கிறது

புதன்கிழமை, 19 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

நியூயார்க், அக். 19 - பெரிய தொழில் நிறுவனங்களுக்கு எதிராக நியூயார்க்கில் உள்ள வால்ஸ்ட்ரீட் என்ற இடத்தில் தொடங்கிய போராட்டம் மேலும் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. பெரிய கார்பரேட் நிறுவனங்களின் பேராசைக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. வால்ஸ்ட்ரீட்டில் கடந்த மாதம் 17 ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் பரவி வருகிறது.  இந்நிலையில் சிகாகோவில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 175 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அங்குள்ள கிராண்ட் பூங்காவில் கூடாரம் அமைத்து போராட முயன்றனர். கூடாரத்தை கலைக்க மறுத்ததுடன் அங்கிருந்து கலைந்து செல்லவும் அவர்கள் மறுத்தனர். நியூயார்க்கில் உள்ள வங்கி கிளை ஒன்றை நோக்கி ஆயிரக்கணக்கானோர் பேரணியாக சென்றனர். வங்கிக்குள் நுழைந்த சிலர் வங்கி கணக்குகளை மூட வலியுறுத்தினர். இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் இப்போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago