முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் மூத்த அரசு அதிகாரி சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

பண்டா, அக்.20 - உத்தரபிரதேச மாநிலத்தில் மூத்த அரசு அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரை சுட்டுக்கொன்ற இரண்டு அடையாளம் தெரியாத நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் பண்டா என்ற இடத்தில் பொதுப்பணித்துறை கூடுதல் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஆனந்த் குமார் சவுகான். 

இவர் நேற்று தனது வீட்டில் இருந்தபோது அவரை சந்திக்க அடையாளம் தெரியாத இரு நபர்கள் வந்தனர். அப்போது அந்த மூத்த அரசு அதிகாரியை  மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் எதற்காக சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி கண்டுபிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!