முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனியா தான் பலமான லோக்பாலை கொண்டு வர முடியும்

வியாழக்கிழமை, 20 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

லக்னோ,அக்.20 ​- காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால்தான் பலமான லோக்பால் மசோதாவை கொண்டுவர முடியும் என்று அண்ணா ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். ஊழலை ஒழிக்க பலமான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும் என்று பிரபல காந்தீயவாதியான அண்ணாஹசாரே தலைமையிலான குழு வலியுறுத்தி வருகிறார். இந்த குழுவில் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கிரண்பேடி, பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்,அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் மீது சுயநலவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் அரவிந்த் கேஜரிவால் மீது செறுப்பு வீசப்பட்டது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

இந்தநிலையில் அரவிந்த் கேஜரிவால் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஊழலை ஒழிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நினைத்தால்தான் பலமான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டுவர முடியும் என்றார். தற்போது மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் உள்ளது. அதனால்தான் அந்த கட்சியை நாங்கள் தாக்கி வருகிறோம். பலமான லோக்பால் மசோதாவை கொண்டு வரும் பொறுப்பு அந்த கட்சிக்குத்தான் தற்போது உள்ளது. அதனால்தான் அந்த கட்சியை நாங்கள் வற்புறுத்தி வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக உத்திரப்பிரதேச மாநிலம் ஊழலில் சிக்கி தவிக்கிறது. மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு வந்தபோதிலும் ஊழல் ஒழிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ஊழல்தான் அதிகரித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் மாயாவதி ஆட்சியில் தேசிய கிராமப்புற சுதாதாக இயக்கத்தில் ஊழல் நடந்துள்ளது. தாஜ் மஹால் வளாகம் கட்டுவதிலும் ஊழல் நடந்துள்ளது என்று கேஜரிவால் கடுமையாக குற்றஞ்சாட்டினார். முலாயாம் சிங் தலைமையில் ஆட்சி இருந்தபோது வேலைவாய்ப்பு அளிப்பதில் பெரும் ஊழல் நடந்தது. அரசு வேலையில் சேருவதற்காக இளைஞர்கள் தங்களுடைய தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோர்களின் நகைகளை குறைந்த விலைக்கு விற்று அதன் மூலம் கிடைத்த பணத்தை வேலைக்கு கொடுக்க வேண்டிதாயிற்று என்றும் கேஜரிவால் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்