முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபி சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

திரிபோலி,அக்.21 - லிபியாவின் முன்னாள் அதிபர் முவாம்மர் கடாபி புரட்சி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் குண்டுகாயங்களுடன் கடாபி கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக கிளம்பியவர்களில் ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன்,லிபியாவின் அதிபராக இருந்த முவாம்மர் கடாபி,ஈரான் அதிபர் ஆகியோர் அடங்குவர். எகிப்தும் முதலில் அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டது. பின்னர் எதிர்ப்பை எகிப்து குறைத்துக்கொண்டது. 

இந்தநிலையில் எகிப்பது எதிராக முபாரக் சுமார் 30 ஆண்டுகள் இருந்தார். அவருக்கு எதிராக அந்த நாட்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனை பயன்படுத்தி அமெரிக்கா மூக்கை நுழைக்கக்கூடும் என்று கருதிய முபாரக், அதிபர் பதவியில் இருந்து விலகி எகிப்தில் ஏற்பட்ட புரட்சி ஒடுங்க வழிவகுத்துக்கொடுத்தார். எகிப்தை பார்த்த லிபியா நாட்டு மக்களும் சுமார் 42 ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்த அதிபர் முவாம்மருக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவருக்கு எதிராக லிபியாவிலேயே கலவரத்தில் ஈடுபட்டனர். இதை ஒடுக்க கடாபி முயன்றபோது உள்நாட்டு போராக மாறியது. இதை பயன்படுத்திக்கொண்ட அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் லிபியாவில் புரட்சியாளர்களுக்கு ஆதரவாக கடாபி ஆதரவாளர்கள் மீதும் ராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தின. இதில் லிபியாவின் பொருளாதாரமே அழிந்தது. எண்ணெய் வளம்மிக்க நாடுகளில் ஒன்றான லிபியா பற்றி எரியத்தொடங்கியது. படிப்படியாக கிளர்ச்சியாளர்களின் கை ஓங்கியது. லிபியாவை பகுதி பகுதியாக கைப்பற்றி வந்தனர். புரட்சியாளர்கள், அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத கடாபி, பதவியை துறந்து தலைமறைவானார். அவர் நாட்டை விட்டே ஓடிப்போய் இருக்கலாம் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் அவர் லிபியாவிலேயே தங்கியிருந்ததாகவும் அவரை புரட்சி படையினர் சுட்டுகொலை செய்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சிர்டே என்ற நகரில் நடந்த சண்டையில் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாக அல் ஜசீரா என்ற தொலைகாட்சி செய்தியை வெளியிட்டுள்ளது. சிர்டே நகரமானது கடாபியின் சொந்த நகரமாகும். அந்த நகரத்தை புரட்சி படையினர் கைப்பற்றி உள்ளனர். அப்போது கடாபிக்கும் புரட்சி படையினர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்ததாகவும் இதில் கடாபி சுட்டுக்கொலை செய்யப்பட்டதாகவும் அந்த தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் சுட்டுக்கொல்லப்படவில்லை என்றும் கால்களில் குண்டுகாயங்கள் பட்ட நிலையில் புரட்சி படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அமெரிக்காவுக்கு எதிராக கடாபி செயல்பட்டு வந்தாலும் அவருக்கு இந்தியா மீது பாசமும் இறக்கமும் அதிகம். லிபியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தாராளமாக அனுமதித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடாபியின் மகன் ஒருவர் ஏற்கனவே அமெரிக்க படைகளின் தாக்குதலில் பலியானார். கடாபியின் குடும்பத்தை சேர்ந்த பலர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேறி ஜோர்டானில் தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago