முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.21 - வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டுமென்று கலெக்டர் சகாயம் வேண்டுகோள் விடுத்துள்ளார் மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் சகாயம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கலெக்டர் சகாயம்  பேசியதாவது, மதுரை மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்தல் சுதந்திரமாகவும். நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல் பணியில் பணியாற்றிவர்களை உளமார பாராட்டுகிறேன். இது போன்று நாளை (இன்று) நடைபெறும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள் நடுநிலைமையோடு, ஒருதலைபட்சம் இல்லாமல் அரசு ஊழியர் என்ற அடிப்படையில் நியாயமாக செயல்பட வேண்டும். அவற்றிற்கு மாறாக ஒரு தலைபட்சமாக பணியில் ஈடுபடுபவர்கள் செயல்படுவதாக புகார் வந்தால் அவர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் ஒலி பெருக்கி ஏற்பாடுகள் செய்திடல் வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏதேனும் கூடுதல் எந்திரங்கள் நிறுவப்பட்டிருந்தால் அதற்கான கட்டுப்பாட்டு கருவிகளையும் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து வர வேணடும். அதன் எண்களை முகவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப.முருகேஷ், மாநகராட்சி உதவி ஆணையர் தர்ப்பகராஜ், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை பிரபாகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அலிஅக்பர், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குருமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) ஜெயசிங்கஞானதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வரலெட்சுமி, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைராஜ், புகழேந்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ் மற்றும் காவல்துறை, வருவாய்துறை, வளர்ச்சி துறை அலுவலர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்