முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாநிதி மாறன் மீதான ஆதாரங்களை அழிக்க முயற்சி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      ஊழல்
Image Unavailable

 

சென்னை, அக்.21 - சென்னை போட்கிளப்பில் உள்ள தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தனது வீட்டில் முறைகேடாக 323 இணைப்புகளை பயன்படுத்தியமுறை கேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதற்க்கான ஆதாரங்களை அலுவலகத்துக்கு வந்து அழிக்க முயல்வதாக முன்னாள் தலைமை பொது மேலாளரை எதிர்த்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். இதுபற்றி விவரம் வருமாறு: கடந்த வாரம் முன்னாள் தி.மு.க. மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் வீடுகள் சன்டிவி அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தனது வீட்டில் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி தனி எக்சேஞ் நடத்தி வந்ததும் தெரியவந்தது. அதற்கான ஆதாரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் திரட்டினர்.

இந்த விவகாரத்துக்காக தயாநிதிமாறனையும் அவரது அண்ணன் கலாநிதிமாறனையும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்க உள்ளனர். இந்த நிலையில் பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளராக இருந்தவர் வேலுச்சாமி தற்போது ஓய்வு பெற்று விட்ட இவர்அடிக்கடி பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு வந்து ஆவணங்களை அழிக்க முயற்சி செய்வதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஓய்வு பெற்ற ஒருவர் எதற்கு அடிக்கடி வந்து ஆவணங்களை திருத்த வேண்டும் என்று கேள்வி கேட்கும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆவணங்களை அழிக்க முயலும் முன்னாள் பொது மேலாளரை வேலுச்சாமியை அலுவலகத்தில் அனுமதிக்க கூடது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று புரசைவாக்கத்தில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தொலை தொடர்பு துறை உழியர்கள் சங்க அகில இந்திய பொது செயலாளர் மதிவாணன் தலைமையில் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!