முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் லூஸ் மோகன் கமிஷனரிடம் புகார் - பேட்டி

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 21 -​ எனக்கு சோறுபோடாமல் என்மகனும், மருமகளும், கொடுமை படுத்துகிறார்கள். எனக்கு வேறு எதுவும் தேவை இல்லை 3-வேளை சோறு போட்டால் போதும் என்று பழம் பெரும் நடிகர் லூஸ்மோகன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்து விட்டு கண்ணீர் மல்க பேட்டியளித்தார் இந்த வேதனை நிறைந்த சம்பவம் குறித்து விபரம் வருமாறு:

பழம்பெரும் நகைச்சுவை நடிகர் லூஸ்மோகன் வீடு மயிலாப்nullர் சாலித்தெருவில் உள்ளது.     எம்.ஜி.ஆர்., பி.யூ. சின்னப்பா நடித்த அரிச்சந்திரா படத்தில் அறிமுகமான இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடக்க முடியாத நிலையில் இருக்கும் லூஸ்மோகன் நேற்று காலை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து இறங்கினார். கமிஷனரை பார்க்க வேண்டும் என்று கூறினார். அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. போலீசாரிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். கமிஷனரிடம் புகார் கொடுக்கவேண்டும் என்று கூறியதும் அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்று வரவேற்பு அறையில் உட்கார வைத்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். நான்கு வரியில் எழுதப்பட்ட அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:​ எனது மகன் கார்த்திக், மனைவியுடன் சேர்ந்து சாப்பாடு போடாமல் இருக்கிறான். அவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நான் வேறு எதுவும் கேட்க வில்லை. மூன்றுவேளை சாப்பாடு கொடுத்தால் போதும். இவ்வாறு அவர் கூறி இருந்தார். இந்த மனு மயிலாப்nullர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. 

புகார் மனு கொடுத்து விட்டு வெளியே வந்த நடிகர் லூஸ்மோகன் நிருபர்களிடம் கண்ணீர் மல்க கூறியதாவது:-​ சினிமாவில் பலரை சிரிக்க வைத்த எனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று நினைத்துக்கூட பார்க்க வில்லை. எனக்கு 3 மகள்களும், கார்த்திக் என்ற மகனும் உண்டு. மகள்களுக்கு திருமணமாகி விட்டது. மகனுக்கும் திருமணமாகி குழந்தை உள்ளது. எனது மனைவி 2004-ம் அண்டு இறந்து போனார். மகனுடன் நான் தங்கி இருக்கிறேன். அவனை நான்தான் ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்து விட்டேன்.   கடந்த 3 நாட்களாக அவன் மனைவி பேச்சை கேட்டு வீட்டுக்கு வருவதில்லை. எனக்கு சாப்பாடு வாங்கி தருவது இல்லை. எனக்கு வயதாகி விட்டதால் காலையில் 2 இட்லியும், இரவு 2 இட்லியும் மட்டுமே சாப்பிடுகிறேன். 

அதை கூட தர மறுக்கிறார். (இப்படி கூறும்போது, அவர் கண்ணீர் விட்டு அழுதார்) பார்த்திபன் நடித்த அழகி படத்தில் நான் கடைசியாக நடித்தேன். கால் முறிந்ததால் அதன்பின் நடிக்கவில்லை. சிகிச்சைகாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சங்கம் உதவி செய்தது. எனக்கு சொந்தமாக வீடு உள்ளது. அதனால் தங்குவதற்கு பிரச்சினை இல்லை. என் பையன் என்னை கவனித்து சாப்பாடு மட்டும் கொடுத்தால் போதும். இவ்வாறு அவர் கூறினார். லூஸ்மோகனின் நிலைமை கேட்டு அங்கு நின்றவர்களும் கண்கலங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony