முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று மாலைக்குள் உள்ளாட்சி தேர்தல்முடிவு

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, அக்.21 -​ தமிழகத்தில் கடந்த 17-ந் தேதி மற்றும் 19-ந் தேதி 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 1072 மையங்களில் என்னாபடும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும். இது குறித்து விபரம் வருமாறு: தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 பதவி இடங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். மீதமுள்ள 1,12,759 பதவியிடங்களுக்கு உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க கடந்த 17-ந் தேதி  (திங்கட்கிழமை), மற்றும் 19​ந் தேதியும்(புதன்கிழமை)  2 கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்றது. 

முதல் கட்டமாக சென்னை உள்பட 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கு 17-ந் தேதி  தேர்தல் நடைபெற்றது.  

 முதல் கட்ட தேர்தலில் ஒரு கோடியே 37 லட்சத்து 97 ஆயிரத்து 898 பேர் வாக்களிப்பதற்காக  43 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில், 1,399 இடங்களில் 4,934 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. சென்னை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 44 1/2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 

தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் 7 லட்சம் பணியாளர்களும், 80 ஆயிரம் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.மேலும், வெளிமாநில போலீசாரும் வரவழைக்கப்பட்டிருந்தனர். 

சென்னை மாநகராட்சி பகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு செய்தபோது வீடியோ படம் எடுக்கப்பட்டது. இதேபோல் பிற பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. 

அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வசிப்பிடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். தமிழக முதல்வர் ஜெயலலிதா ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியிலும், தி.மு.க. தலைவர் கருணாநிதி சாரதா பள்ளியிலும், சென்னை மாகர மேயர் பதவிக்கு போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் சைதை துரைசாமி சி.ஐ.டி.நகரில் உள்ள பள்ளியிலும், தி.மு.க. வேட்பாளர் சுப்பிரமணியன் கிண்டியில் உள்ள பள்ளியிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள பள்ளியிலும் வாக்களித்தனர்.

அதே போல் மற்ற கட்சி தலைவர்களும், திரை நட்சத்திரங்களும் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்களித்தனர்.

காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு துவங்கியது. மாலை 5 மணிவரை அனைத்து பகுதிகளிலும் அமைதியாகவே வாக்குப்பதிவு நடந்தது. 

கடந்த 17-ந் தேதி நடைப்பெற்ற முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சராசரியாக 77 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களில் ஓட்டுப் பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது வாக்குபதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. கிராமப்புறங்களில் காலை 7 மணியில் இருந்தே ஓட்டுப் பதிவு விறு விறுப்பாக இருந்தது. 38 ஆயிரத்து 20 ஓட்டுச் சாவடிகளில் நடந்த இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்காக பாதுகாப்பு உள்பட எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.

எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப் பதிவை வீடியோவில் பதிவு செய்தனர். 

கிராமப்புறங்களில் ஒவ்வொரு வாக்காளரும் 4 ஓட்டுக்கள் போட்டதால் மற்ற வாக்காளர்கள் காத்திருக்க நேரிட்டது. nullத்​சிலிப்புகள் புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டதால் தேவை இல்லாத தாமதம் தவிர்க்கப்பட்டது. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர். மொத்தம் 80 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

 

தமிழகத்தில் 2 கட்டமாக நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்கு பெட்டிகள் 1072 மையங்களில் நாள் அடுக்கு போலீஸ் பாதுகாப்புவுடன் வைக்க பட்டுவுள்ளன. அவற்றை இன்று காலை இதற்காக நிய்மிக்கபட்டுள்ள உழியர்கள் வாக்கு பெட்டிகளை திறந்து வாக்குகளை எண்ணா ஆரம்பிப்பார்கள் பல சுற்றுகளாக எண்ணப்படும் வாக்கு முடிவுகள் ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் அறிவிக்கப்படும்.

எலெக்ட்ரானிக் வாக்கு எந்திரம் மூலம் பதிவு ஆனா வாக்கு எண்ணிக்கை நிலவரம் மதியம் 12 மணிக்குல் தெரியவரும் ஒட்டு மொத்த தேர்தல் முடிவுகளில் பெறும்பாலனவை மாலைகுள் தெரிந்துவிடும். ஐ கோர்ட் உத்தரவுவிட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை வெப்கேமரா மூலம் பதிவு செய்யபடும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் அதிகாரபுர்வ வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் தேர்தல் பார்வையாளர்கள் தேர்தல் ஆணையம் அணுமதி பத்திரிக்கையாளர்கள் மற்றுமே அணுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறிவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago