முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக்.21 - நடந்து முடிந்த திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டப் பேரவை தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களிலும் nullங்கள் அளித்த தீர்ப்புகளுக்கு முதலில் என்னுடைய இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னுடைய தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சியைப் பற்றி nullநீங்கள் என்ன எடை போட்டிருக்கிறீர்கள் என்பதை உலகம் தெரிந்து கொள்ள இந்தத் தேர்தல் முடிவுகள் அமையும் என்று நான் உறுதிபட நம்பினேன்.  என்னுடைய நம்பிக்கை மெய்ப்பட்டிருக்கிறது.  உங்களுடைய மகத்தான தீர்ப்பு நான் எதிர்பார்த்ததைப் போலவே அமைந்திருக்கிறது.  எனவே, உங்கள் அனைவருக்கும் மிகுந்த மன நெகிழ்ச்சியோடு, அன்புப் பெருக்கோடு மீண்டும் மீண்டும் நன்றி கூறி மகிழ்கிறேன்.  எண்ணற்ற இடர்ப்பாடுகள், பொருளாதார பற்றாக்குறைகள், நிர்வாக சீர்கேடுகள், கடன் சுமைகள் என்று அனைத்து முனைகளிலும் தாக்குதல்களுக்கு உள்ளாகி தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக ஆட்சிப் பொறுப்பைத் தான் உங்கள் அன்புச் சகோதரியாகிய என்னிடம் ஐந்து மாதங்களுக்கு முன்னர் அளித்தீர்கள்.  இந்தக் குறுகிய காலத்திலேயே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நடைமுறைப்படுத்தி உங்கள் அன்பை இந்த அரசு பெற்றிருக்கிறது என்பதற்கு இந்தத் தேர்தல் முடிவுகளே சாட்சி.    என்னுடைய பணிகளுக்கெல்லாம் பாராட்டு கூறும் வகையிலும், பக்கபலமாக இருக்கும் முறையிலும், திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும், உள்ளாட்சி மன்றத் தேர்தலிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்காளப் பெருமக்களாகிய nullங்கள் மகத்தான வெற்றியை அளித்திருக்கிறீர்கள்.  2011, ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திருச்சிராப்பள்ளி மேற்கு தொகுதியில் மொத்தம் 1,54,322 வாக்குகள் பதிவாகின.  அதாவது, 74.93 சதவீத வாக்குகள்.  இதில், அஇஅதிமுக 77,492 வாக்குகள் பெற்று, 7,179 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.   தற்போது நடைபெற்ற இடைத் தேர்தலில், 1,27,433 வாக்குகள் பதிவாகின.  அதாவது, 61.15 சதவீத வாக்குகள்.  இதில், அஇஅதிமுக 69,029 வாக்குகள் பெற்று, 14,684 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இந்த முறை நம்மோடு கூட்டணிக் கட்சிகள் இல்லை.  இருந்தும் கூட, முன்னரைக் காட்டிலும் இரு மடங்கு வாக்கு வித்தியாசத்தில் கழக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார்.  இதுவே, எனது ஆட்சிக்கு நீnullங்கள் அளித்திருக்கும் நற்சான்றிதழ் என்று நான் கருதுகிறேன்.  மக்கள் நலப் பணிகள் அனைத்தையும் தொய்வின்றி, துடிப்போடு நடைமுறைப்படுத்துவதில் என்னுடைய உழைப்பு உங்களுக்காக தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற வாக்குறுதியையும் இந்த நேரத்தில் உங்களுக்கு நான் அளிக்க விரும்புகிறேன்.  இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அமைச்சர்களுக்கும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.  இதே போன்று, உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் கழக வேட்பாளர்களே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.  நகர மன்றத் தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் 88 இடங்களில் வென்றிருக்கிறார்கள். பேரூராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் கழக வேட்பாளர்கள் 284 இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.  தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்ற மேலும் பல இடங்களில் கழக வேட்பாளர்களே வெற்றி வாய்ப்போடு முன்னணியில் இருக்கிறார்கள் என்ற செய்தியும் வந்த வண்ணம் உள்ளது. இவை மட்டும் அல்லாமல், கட்சி சின்னங்கள் இன்றி நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்ட கழக உடன்பிறப்புகளும் பெருவாரியாக வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற இனிய செய்தியும் வந்து கொண்டே இருக்கின்றன.  உள்ளாட்சி மன்றங்கள் என்பவை ஜனநாயகத்தின் தொடக்கப் பள்ளி.  நாற்றங்கால்.  வலுவான உள்ளாட்சி அமைப்புகள், ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கும், அரசின் திட்டங்களை செம்மையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அவசியம் என்று நான் பலமுறை உங்களுக்கு நினைவூட்டி இருக்கிறேன்.  என்னுடைய கருத்தை ஏற்று, மாநில அரசின் வளர்ச்சிப் பணிகள் எல்லாம் சிறப்பாக நடைபெறும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை மாபெரும் வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள்.  உங்களுக்கு மீண்டும் என்னுடைய நன்றி உரித்தாகுக.

உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அரும்பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், உடன்பிறப்புகளுக்கும், கழகத்தின்பால் அன்பு கொண்ட தோழமைக் கட்சியினருக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டையும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அனைவரும் ஆங்காங்கே உள்ள கழக நிர்வாகிகளுடன் சேர்ந்து வீதி வீதியாக, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நல்ல ஆட்சி, நல்ல நிர்வாகம் வழியாக வளமான தமிழகம் காண்போம்! மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவோம்! இதுவே இந்தத் தருணத்தில் நான் உங்களுக்கு உறுதி கூறுகின்ற நல்ல செய்தியாகும்.   இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்