முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை மேயர் தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை அக்22 - நெல்லை மாநகராட்சி மேயர் பதவி மற்றும் 55 வார்டுகளின் கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் பாளை அரசு என்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கை 6 பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் 14 டேபிள்கள் போடப்பட்டிருந்தன. நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு மொத்தம் 14 பேர் போட்டியிட்டனர். ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. பின்பு வாக்கு பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிமுக மேயர் வேட்பாளர் விஜிலா சத்யானந்த் முன்னிலை வகித்துவந்தார்.  மொத்தம் 10 சுற்றுகள் எண்ணப்பட்டது. 

நெல்லை மாநகராட்சி மேயர் பதவி தேர்தலில் 10 சுற்றுகளிலும் முதல் ஆறு இடங்களில் வந்தவர்களின் விபரம் வருமாறு:​-

 

முதல் சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  9531

அமுதா  (திமுக)  6325

அசன்பாத் (சுயே) 2366

கண்ணம்மாள் (தேமுதிக)  1338

மகேஷ்வரி  (மதிமுக) 835

ஜூலியட் பிரேமலதா (காங்) 764

 

2ம் சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  18952

அமுதா  (திமுக)  12716

அசன்பாத் (சுயே) 2886

கண்ணம்மாள் (தேமுதிக)  2620

ஜூலியட் பிரேமலதா (காங்) 1822

மகேஷ்வரி  (மதிமுக) 1618

 

3வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  22868

அமுதா  (திமுக)  17817

அசன்பாத் (சுயே) 3900

கண்ணம்மாள் (தேமுதிக)  3534

ஜூலியட் பிரேமலதா (காங்) 2831

மகேஷ்வரி  (மதிமுக) 2223

 

4வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  35419

அமுதா  (திமுக)  23646

அசன்பாத் (சுயே) 5371

கண்ணம்மாள் (தேமுதிக)  4566

ஜூலியட் பிரேமலதா (காங்) 3467

மகேஷ்வரி  (மதிமுக) 3170

 

5வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  44424

அமுதா  (திமுக)  28667

அசன்பாத் (சுயே) 6290

கண்ணம்மாள் (தேமுதிக)  5734

ஜூலியட் பிரேமலதா (காங்) 4312

மகேஷ்வரி  (மதிமுக) 3809

 

6வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  52275

அமுதா  (திமுக)  35027

அசன்பாத் (சுயே) 7307

கண்ணம்மாள் (தேமுதிக)  6612

ஜூலியட் பிரேமலதா (காங்) 5113

மகேஷ்வரி  (மதிமுக) 4599

 

7வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  61335

அமுதா  (திமுக)  41612

அசன்பாத் (சுயே) 8220

கண்ணம்மாள் (தேமுதிக)  7380

ஜூலியட் பிரேமலதா (காங்) 6193

மகேஷ்வரி  (மதிமுக) 5245

 

8வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  67631

அமுதா  (திமுக)  46575

அசன்பாத் (சுயே) 9084

கண்ணம்மாள் (தேமுதிக)  8558

ஜூலியட் பிரேமலதா (காங்) 7148

மகேஷ்வரி  (மதிமுக) 6053

 

9வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  73918

அமுதா  (திமுக)  51435

அசன்பாத் (சுயே) 10198

கண்ணம்மாள் (தேமுதிக)  9239

ஜூலியட் பிரேமலதா (காங்) 7920

மகேஷ்வரி  (மதிமுக) 6738

 

10வது சுற்று

விஜிலாசத்யானந் (அ.தி.மு.க.)  80265

அமுதா  (திமுக)  55681

அசன்பாத் (சுயே) 11587

கண்ணம்மாள் (தேமுதிக)  10021

ஜூலியட் பிரேமலதா (காங்) 8456

மகேஷ்வரி  (மதிமுக) 7019

வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக வேட்பாளர் விஜிலாசத்யானந் மொத்தம் 80265 வாக்குகள் பெற்று 24584 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் அமுதாவை தோற்கடித்து அபார வெற்றிபெற்றார். இந்த அபார வெற்றியை நெல்லை அதிமுக தொண்டர்கள் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago