முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: அதிமுக வேட்பாளர் வெற்றி

சனிக்கிழமை, 22 அக்டோபர் 2011      அரசியல்
Image Unavailable

 

தூத்துக்குடி, அக்டோபர்-22 - தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் கிடைத்த வெற்றி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி அதிமுக வெற்றி வேட்பாளர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவிக்கும், 60 வார்டு கவுன்சிலர் பதவிக்கும் முதன் முதலாக தேர்தல் நடந்து, வாக்கு எண்ணிக்கை இன்று காலை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில், மேயர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா 23,256 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.

மேயர் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை விபரம்

மொத்த வாக்காளர்கள் 2,32,309

பதிவான வாக்குகள் 157082

தபால் ஓட்டுக்கள் 380

செல்லாதவை 4

சசிகலா புஷ்பா (அதிமுக) 65050

பொன் இனிதா (திமுக) 41794

பாத்திமா பாபு (மதிமுக) 29336

ராஜேஸ்வரி (தேமுதிக) 7407

சிந்தியா வைலட் லில்லி 6485

ஹேமா (சுயேட்சை) 1655

ராஜலட்சுமி (புதிய தமிழகம்) 1304

சித்ரா (சுயேட்சை) 1210

குருசோபனா (பாமக) 850

அன்னபாக்கியம் (சுயேட்சை) 818

தங்கம் (சுயேட்சை) 358

திலகவதி (ஐஜேகே) 315

இத்தேர்தலில் 2வது இடத்தை திமுக பிடித்துள்ளது. 3வது இடத்தில் மதிமுகவும், 4வது இடத்தில் தேமுதிகவும் பிடித்துள்ளன. இதில், அதிமுக, திமுக, மதிமுக தவிர 9 வேட்பாளர்களும் டொசிட் தொகையை இழந்தனர்.

வெற்றிவேட்பாளர் சசிகலா புடி;பாவிற்கு மாநகராட்சி தேர்தல் அதிகாரி தினேடி; ஆலிவர் பொன்ராஜ் வெற்றிச் சான்றிதழை வழங்கினார். இதில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், பெருநகரச் செயலாளர் ஏசாதுரை, மருத்துவர் அணிச் செயலாளர் ராஜசேகரன் உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.,

வெற்றிபெற்ற சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் உள்ள தலைவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம கூறியதாவது, புரட்சித் தலைவி அம்மாவின் நலத்திட்ட உதவிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். எனது வெற்றியை அம்மாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

இந்த மகத்தான சாதனை தூத்துக்குடி மாநகராட்சியில் தொடரும். தூத்துக்குடி மாநகராட்சி தலைசிறந்த மாநகராட்சியாக மாற்றிக் காட்டுவேன். எனது வெற்றிக்காக பாடுபட்ட அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டனி கட்சியினருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்