முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறப்பு சலுகை கோருகிறது மேற்கு வங்க அரசு

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அக். - 24 - மேற்கு வங்க மாநிலத்தின் கடன்சுமை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சிறப்பு சலுகை அளிக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி மன்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது, மேற்கு வங்கத்தின் கடன் சுமை 1.9 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 34 ஆண்டு கால கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் பொருளாதாரம் கசாப்பு கடையாகி விட்டது. நிதி நிர்வாகம் நிர்வகிக்கப்படாத நிலையை எட்டியுள்ளது. மேற்கு வங்கத்தின் இந்த நிலையை எந்த மாநிலத்துடனும் ஒப்பிட முடியாது. இந்த நிலையை சீரமைக்க மாநிலத்தின் பொருளாதார திட்டங்களுக்கு அதிக அளவிலான நிதி திருப்பி விடப்பட வேண்டும். குறிப்பாக திட்டமில்லா செலவினத்துக்கு அதிக நிதி வேண்டும். இதற்கு வரும் 12 வது திட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட வேண்டும் என்று மம்தா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!