முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனப் பெருஞ்சுவருக்கு சுசுரங்கங்களால் ஆபத்து

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

 

பெய்ஜிங், அக். - 24 - உலகப் புகழ் பெற்ற சீனப் பெருஞ்சுவருக்கு அருகில் உள்ள கனிம சுரங்கங்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  சீனாவில் 6 ஆயிரத்து 400 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள பெருஞ்சுவர் உலகப் புகழ் பெற்றதாகவும், காடு, மலை, பள்ளத்தாக்கு என அனைத்து பகுதிகள் வழியாகவும் செல்லும் இந்த நூற்றாண்டு பெருமை கொண்ட பெருஞ்சுவர் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த பெருஞ்சுவருக்கு தற்போது கனிம சுரங்கங்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த சுவரையொட்டிய மலைப் பகுதிகளில் செம்பு,நிக்கல், இரும்பு மற்றும் பளிங்கு கற்கள் போன்றவை அதிகளவில் வெட்டி எடுக்கப்படுகின்றன. இதன் காரணமாக பெருஞ்சுவரில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த பெருஞ்சுவர் முற்றிலுமாக உடைந்து விழும் முன் இதனை பாதுகாக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். பெருஞ்சுவரில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவு வரை கனிம வளங்களை தோண்ட தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்