முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி நாளை மறுநாள் மதுரை வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

மதுரை, அக். - 25 - பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே. அத்வானி வரும் 27 ம் தேதி மதுரை வருகிறார். இது குறித்து அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தெரிவித்துள்ளதாவது,  ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு யாத்திரையை எல்.கே. அத்வானி மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை வரும் 27 ம் தேதி மதுரை வருகிறது. மதுரையில் இந்த விழிப்புணர்வு யாத்திரையை எல்.கே. அத்வானி துவக்கி வைக்கிறார். பின்னர் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு மதுரை வடக்கு மாசி, மேலமாசி வீதி சந்திப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். எல்.கே. அத்வானி சிறப்புரையாற்றுகிறார்.  இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முரளிதரராவ், இல. கணேசன், கே.என். லெட்சுமணன், எச். ராஜா, சுகுமாறன் நம்பியார், சி.பி. ராதாகிருஷ்ணன், மோகன் ராஜூலு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். வரும் 28 ம் தேதி கோரிப்பாளையம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம் வழியாக ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை வழியாக திருவனந்தபுரத்திற்கு அத்வானி செல்கிறார். எல்.கே. அத்வானியின் மதுரை வருகையையொட்டி பா.ஜ.க. வை சேர்ந்த மாவட்ட மண்டல வார்டு நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!