முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபையில் எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம். அக். - 25 - கேரள சட்டசபையில் நேற்று இடது கம்யூனிஸ்டு தலைமையிலான எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு  செய்தனர். கேரளாவில் கடந்த இடது சாரி ஜனநாயக முன்னணி ஆட்சிக்காலத்தில் கேரள கால்நடை மற்றும் விவசாய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக அசோக் என்பவர் நியமிக்கப்பட்டார். ஆனால் இவர் இப்போது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளை மீறி இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும்  கேரள சட்டசபையில்  இடது கம்யூனிஸ்டு  தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தன. இதற்கு பதில் அளித்து பேசிய  முதல்வர் உம்மன் சாண்டி  அசோக்கை பதவி நீக்கம் செய்ததில் எந்த விதிமுறையும் மீறப்படவில்லை என்றும் அவர் கேரள தலைமை செயலாளரை பற்றி விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார் என்றும் நிர்வாக காரணங்களுக்காக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரே தவிர அரசுக்கும் அவரது பதவி நீக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். ஆனால் அவரது  பதிலில் திருப்தி அடையாத இடது சாரி எம்.எல்.ஏ.க்கள்  எதிர்க்கட்சி தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையில்  சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!