முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபி கொலை- ராஜபக்சே அதிர்ச்சி ஐ.நா.விடம் விளக்கம் கேட்கும் இலங்கை

செவ்வாய்க்கிழமை, 25 அக்டோபர் 2011      உலகம்
Image Unavailable

கொழும்பு, அக்.- 25 - லிபியா அதிபர் கடாபியின் மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதால் இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா.வுக்கு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  லிபியா அதிபராக இருந்த மும்மர் கடாபியை அந்நாட்டு மக்கள் மற்றும் புரட்சி படையினர் விரட்டியடித்து சுட்டுக் கொன்றனர். கடாபியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ராஜபக்சே கடந்த 2007ம் ஆண்டு லிபியாவிற்கு சென்றிருந்த போது அவரை சந்தித்து பேசினார். அதே போல ராஜபக்சேயின் மகன் நமல் ராஜபக்சேவும் கடந்த ஆண்டு கடாபியை சந்தித்தார். இந்நிலையில் கடாபியை புரட்சிப்படையினர் நடுரோட்டில் இழுத்துச் சென்று கொலை செய்துள்ள செயல் இலங்கை அரசை அதிர வைத்து பீதியடையச் செய்துள்ளது.  இதன் பின்னணியில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கடாபி பிடிபட்ட விதம், அவரது மரணம் தொடர்பான சூழல் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. எனவே இது குறித்து ஐ.நா. சபை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளது. கடாபியின் நண்பனான ராஜபக்சேவின் அறிவுரைப்படி இலங்கை வெளியுறவு அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. நீண்ட நாட்களாகவே இலங்கையுடன் நல்லுறவை பேணி வந்தவர் கடாபி. 1976ம் ஆண்டு கொழும்பில் நடந்த அணி சேரா நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டார். கடாபியின் மரணத்தால் ராஜபக்சே அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்