முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியாவில் போராட்டக்காரர்கள் மீது அரசு படையினர் கடும் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை, 8 மார்ச் 2011      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ,மார்ச்.- 9  - லிபியாவில் போராட்டக்காரர்கள் மீது அதிபர் கடாபியின் ராணுவம் கடும் தாக்குதல் தொடுத்ததில் போராட்டக்காரர்கள் 18 பேர் உயிரிழந்தனர்.  கடந்த 41 ஆண்டுகளாக லிபியாவில் ஆட்சி நடத்தி வரும் கடாபியை பதவி விலக வலியுறுத்தி கடந்த 21 நாட்களாக அவரது எதிர்ப்பாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து லிபியாவின் கிழக்கில் உள்ள பின் ஜவாத், ராஸ் லானஃப் நகரங்களை போராட்டக்காரர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் கடாபியின் படைகள் ஆப்பிரிக்க கூலி படையினரின் உதவியுடன் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இதில் பின் ஜாவாத் நகரில் போராட்டக்காரர்கள் 6 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். கடாபியின் சொந்த ஊரான சிர்டே நகரிலும் போராட்டக்காரர்களை கடாபியின் படைகள் ஒடுக்கி விட்டன. 

இந்நிலையில் கடந்த சில தினங்களாக போராட்டக்காரர்கள் கை ஒங்கியிருந்தது. ஆனால் ஒரே நாளில் கடாபியின் படைகளின் கை ஓங்கி விட்டது போல தோன்றுகிறது என்று அல் ஜஸீரா டி.வி. செய்தி தெரிவித்தது. லிபியாவின் பிரச்சினையில் தலையிடுவது என முடிவு செய்தால் கடல் வழி போராட்டக்காரர்களுக்கு எப்படி உதவ முடியும் என்பது குறித்த திட்டத்தை அமெரிக்க ராணுவம் தயாரித்துள்ளதாக நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இப்பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று அதிபர் ஒபாமாவுக்கு நெருக்குதல் அதிகரித்து வருவதாகவும் பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்