முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடிகுண்டை உடனடியாக கண்டிபிடித்து அகற்றிய தமிழக அரசுக்கு அத்வானி பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,அக்.- 30 - ரதயாத்திரையின்போது பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதை உடனடியாக கண்டுபிடித்து அகற்றிய தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். ஊழலை எதிர்த்தும் அதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் அடுத்த லோக்சபை தேர்தலின்போது பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி ரதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். கடந்த 11-ம் தேதி காஷ்மீர் முதல் கண்ணியாகுமரி வரை ரத யாத்திரையை எல்.கே. அத்வானி,பீகார் மாநிலத்தில் தொடங்கினார். பீகார்,மகாராஷ்டிரா, அசாம், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ரத யாத்திரை இதுவரை சென்றுள்ளது. தமிழகத்தில் ரதயாத்திரை வந்தபோது மதுரையில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அத்வானி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில் ஊழலை ஒழிக்க மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தமாதிரியான ஒரு மோசமான மத்திய அரசை நான் பார்த்ததில்லை என்று வருத்தப்படக்கூறினார். மதுரையில் இருந்து திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். மதுரையை கடந்து செல்லும்போது திருமங்கலம் அருகே ரதயாத்திரை சல்லும் வழியில் ஒரு பாலத்திற்கு அடியில் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக அகற்றப்பட்டது. இதுகுறித்து தமிழக புலனாய்வுத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று 19-வது நாள் ரதயாத்திரையாக கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் சென்ற எல்.கே. அத்வானி, அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது குறித்து குறிப்பிட்ட எல்.கே.அத்வானி, திருமங்கலம் அருகே வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டை உடனடியாக கண்டுபிடித்து அகற்றிய தமிழக அரசையும் தமிழக போலீசாரையும் மனமார வாழ்த்தி பாராட்டுகிறேன் என்றார். இந்த குண்டை வைத்தவர் யார் என்பதையும் இந்த சம்பவத்திற்கு பின்னனி யார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் இது தொடர்பாக விசாரணையை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ விசேஷ சட்டத்தை ஒருபோதும் வாபஸ் வாங்கக்கூடாது என்றார். அப்படி வாபஸ் பெற்றால் ராணுவத்தை பலவீனப்படுத்திவிடும். இதனால் தீவிரவாதிகளின் நடவடிக்கை மேலும் அதிகரிக்கும் என்றார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளை ஒடுக்குவதில் ராணுவம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதை நாம் கெடுத்துவிடக்கூடாது என்றும் அத்வானி கூறினார். விசேஷ ராணுவ சட்டத்தை வாபஸ் பெறத்தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்படி தேவைப்பட்டால் மணிப்பூர் மாநிலத்தின் நிலைமையையும் நாம் தனியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அத்வானி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago