முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில ஒதுக்கீடு புகார்: கர்நாடக அமைச்சர் மீது போலீசார் வழக்குப்பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,அக்.- 30 - முறைகேடாக நில ஒதுக்கீடு செய்தது தொடர்பான புகாரின் பேரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மேலும் ஒரு அமைச்சர் மீது லோக்ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பெங்களூரில் நிலப்பேரம் தொடர்பாக பாரதிய ஜனதா முன்னாள் முதல்வர் எடியூரப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் இருந்த ரெட்டி சகோதரர்கள் மீது சட்டவிரோத சுரங்க ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு தற்போது அமைச்சர் பதவியில் இருந்து அவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதைத்தவிர மேலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நிலப்பேர ஊழல், உறவினர்களுக்கு நிலஒதுக்கீடு தொடர்பாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கடந்த பல மாநிலங்களுக்கு முன்பு மாநில உள்துறை அமைச்சராக இருக்கும் ஆர்.அசோக் மீது லோக் ஆயுக்தா போலீசில் நிலஅபகரிப்பு புகார் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அமைச்சர் அசோக் மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதனையடுத்து மாநில தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருக்கும் முர்கேஷ் நிரானி என்பவர் மீது தொழிலதிபர் ஆலம் பாட்ஷா என்பவர் லோக் ஆயுக்தா போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் அமைச்சர் நிரானி தனது சகோதரருக்கு முறைகேடாக நிலம் ஒதுக்கீடு செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து ஆய்வு செய்த லோக் ஆயுக்தா போலீசார், புகாருக்கான முகாந்திரம் இருப்பதாக கருதி, அமைச்சர் நிரானி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஆளும் பா.ஜ. கட்சியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோலார் சம்பங்கி எம்.எல்.ஏ. மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கோர்ட்டு ஜாமீன் மறுத்துவிட்டது. இதனையொட்டி அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ஆளும் கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் கூறப்படலாம் என்று தெரிகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்