முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு பகல் பாராது அயராது உழைக்க வேண்டும்-ஆர்.பி.உதயகுமார்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், அக்.- 31 - தமிழக முதல்வர் போல் இரவு பகல் பாராது அயராது மக்களுக்காக உழைப்பது போல் நீங்கள் உழைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று தமிழக மக்களுக்காக  இரவு பகல் பாராது அயராது பல்வேறு திட்டங்களை தீட்டி தினமும் தமிழக மக்களுக்காக உழைத்து வருகிறார். ஆனால் கடந்த திமுக ஆட்சியிலோ தனது குடும்பத்திற்காக அயராது உழைத்தார் கருணாநிதி. இன்று 7 கோடி தமிழக மக்களை தனது குடும்பமாக நினைத்து அவர்களின் அடிப்படை தேவைகளை எப்படி பூர்த்தி செய்வது, எவ்வாறு அவர்களின் கஷ்டங்களை விரட்டியடிப்பது என தினமும் சிந்தித்து பல்வேறு திட்டங்கள் தீட்டி வருகிறார். அவரது திட்டங்கள் தொலை நோக்கி திட்டங்கள் என உலக மக்களே பாராட்டி வருகின்றனர். அந்த அளவிற்கு தமிழக மக்களின் மீது மீளாத அன்பு கொண்டு தாயுள்ளத்தோடு பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார் தமிழக முதல்வர். தமிழக முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் திட்டங்கள். அவர்கள் வறுமையை நீக்கும் திட்டங்கள். ஆகவே அப்படிப்பட்ட திட்டங்களை கொண்டு சேர்க்கும் பணியில் நாம் இருக்கிறோம். ஆகவே நாம் தமிழக முதல்வர் போல் இரவு பகல் பாராது தமிழக மக்களுக்காக அரசின் திட்டங்களை மூளை முடுக்கில் இருக்கும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது நமது கடமையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony