முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன்னில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கமுதி, அக். - 31 - தேவர் குருபூஜை விழாவில் தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் உட்பட பல கட்சித் தலைவர்கள் தேவர் சமாதியில் அஞ்சலி செலுத்தினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவில் தி.மு.க. சார்பில் தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். திராவிட விழிப்புணர்வு கழக பி.டி. அரசகுமார், அகில இந்திய மருதுபாண்டியர் தலைவர் ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி சார்பில் திருநாவுக்கரசு, பி.ஜே.பி. சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். தேவர் மக்கள் இயக்க தலைவர் வெள்ளைசாமி, திரைப்பட நடிகர் சிங்கமுத்து, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக டாக்டர் சேதுராமன், மூ.மு.க. நிறுவனர் ஸ்ரீதர் வாண்டையார், நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு தேவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony