முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் பைபாஸ் ரோடு பணிக்கு ரூ 216 கோடி ஒதுக்கீடு

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராஜபாளையம், அக்.- 31 - ராஜபாளையத்தில் பார்லிமெண்ட் முதல் உள்ளாட்சித்தேர்தல் வரை கட்சிகளின் வாக்குறுதியாக பைபாஸ் ரோடு திட்டம் இருந்தது. அதற்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும், நிதி ஒதுக்கீடு, நிலம் கையகப்படுத்துதல் போன்ற பணிகள் ஆரம்பமாகி விட்டதாகவும் எம்எல்.ஏ. கோபால்சாமி தெரிவித்தார். ராஜபாளையம் வழியாக சங்கரன்கோவில், குற்றாலம், தென்காசி, கொல்லம், கேரளாவிற்கு  சரக்கு வாகனங்கள் செல்கின்றன. ராஜபாளையம் தென்காசி இருவழி பாதையாக உள்ளது. அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பொதுவாக ராஜபாளையத்தில் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையில் உள்ளது. இதை நான்கு வழிபாதையாக மாற்ற வழி இல்லாததால் பைபாஸ் ரோடு அவசியமாக உள்ளதென நினைத்து ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி முயற்சிகள் மேற்கொண்டார்.  இவரது முயற்சியின் பயனாக பைபாஸ் ரோடு பணிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் கூட்டுறவு மில்லில் இருந்து இளந்தோப்பு வரை நடைபெற உள்ளது.  25 கிலோ மீட்டரில் பைபாஸ் ரோடு அமைய உள்ளது. இதற்காக 216 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதில் நிலம் கையப்படுத்த 7 கோடி ரூபாய் ஒடுக்கப்பட்டுள்ளதென எம்.எல்.ஏ. கோபால்சாமி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony