முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். - 31​- சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மழை மேலும் நீடிக்கும் பட்சத்தில் இந்த ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.   புதிதாக உருவாகியுள்ள  காற்றழுத்த தாழ்வு நிலை இலங்கையில் இருந்து ஆந்திரா வரை மத்திய மேற்கு வங்கக்கடலில் தொடர்ந்து nullநீடிக்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை nullநீடிக்கும், சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி​குளங்கள், கண்மாய்களில் நீnullர் நிரம்பி வருகின்றன. காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை nullநீடிப்பதால் மேட்டூர் அணை மூடப்பட்டது. சென்னையில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழை nullநீர் தேங்கியுள்ளது. சாலைகள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் குண்டும், குழியுமாக ஆங்காங்கே காட்சியளிக்கிறது. திருவள்ளூர்,  காஞ்சீபுரம் மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீnullர் வழங்கும் ஏரிகளின் நீnullர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. புழல் ஏரி 3 நாட்களுக்கு முன்பாக நிரம்பியது. அதன் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும். தற்போது 3,133 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 716 கன அடி தண்ணீர் வருவதால் 380 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த பகுதியில் 24.4 மி.மீ மழை பெய்துள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இங்கு 2,703 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 474 கன அடி தண்ணீர் வருகிறது. 150 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இங்கு 31 மி.மீ. மழை பெய்துள்ளது. nullண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது 2651 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 735 கனஅடி தண்ணீர் வருகிறது. 568 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதில் பாதி தண்ணீர் சோழவரம் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. 33.8 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.  nullண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்  418 கன அடி வருவதால் ஏரி 1 வாரத்தில் நிரம்பும் நிலையில் உள்ளது.சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடியாகும். தற்போது 631 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 394 கனஅடி தண்ணீர் வருகிறது. 34 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. ஏரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை.  கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் வீராணம் ஏரிக்கு nullநீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடி. தற்போது 687 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 250 கன அடி தண்ணீர் ஏரிக்கு வருகிறது. 272கன அடி திறந்து விடப்படுகிறது. 40 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மழை தொடர்ந்து nullநீடித்தால் இன்னும் 1 வாரத்தில் ஏரிகள் அனைத்தும் நிரம்பி விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 10​ந் தேதிக்கு பிறகு தான் ஏரிகளுக்கு அதிக தண்ணீர் வந்தது. ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே ஏரிகள் நிரம்பி வருகிறது. இதனால் சென்னையில் குடிnullநீருக்கு பஞ்சம் இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்