முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கலெக்டர்மு.பாலாஜி வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

விருதுநகர், அக்.- 31 - மண்டல மகர விளக்கு பூஜை விசேச நிகழ்ச்சி நவம்பர் 17 அன்று புகழ்மிக்க சபரிமலை கோவிலில் தொடங்குகிறது. மகர விளக்கு பூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான யாத்திரை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில், சுகாதாரமான வகையில் நடத்திடும் வண்ணம் அரசு முடிவு செய்துள்ளது. எனவே யாத்திரையின்போது பக்தர்கள் பிளாஸ்டிக் கேரிப் பைகள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறது. அதை மீறி பிளாஸ்டிக் கேரிப் பைகளைப் பயன்படுத்துபவர்கள் மீதும், அதைப்  பொது இடங்களில் அலட்சியமாக வீசி எறிந்து மாசுபடுத்துபவர்கள் மீதும், பொது இடங்களில் அசுத்தம் செய்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பக்தர்களுக்கு சுகாதாரமான மற்றும் இடையூறு இல்லாத யாத்திரைக்கு நன்மை ஏற்படுத்தும் வகையில் அனைத்துவித நடவடிக்கைகளையும் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் சுகாதாரமான மற்றும் இடையூறு இல்லாத யாத்திரைக்கு அனைத்துவித தீவிர முயற்சிகளும் அரசால் எடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலை உணர்ந்து பக்தர்கள் அரசிற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். மேலும் யாத்திரையின்போது தன்னார்வ சேவையில் ஈடுபட விரும்பும் விருப்பமுள்ள பக்தர்கள் கீழ்க்கண்ட ரரர.ஙூஹஸஹஙுடுஙூஹஙூடீசூஹ.கூடீஙுஹங்ஹ.கிச்சு.டுடூ என்ற ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மு.பாலாஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்