முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகேவெடிகுண்டு வைக்கப்பட்ட இடத்தை ஏ.டி.ஜி.பி.ஆய்வு

திங்கட்கிழமை, 31 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

திருமங்கலம், அக். - 31 - திருமங்கலம் அருகே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்தை தமிழக ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருமங்கலம் அருகே நேற்று முன்தினம் காலை ஆலம்பட்டி ஓடுபாலத்தில் வைக்கப்பட்டிருந்த பைப் வெடிகுண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடியாக செயல்பட்டு செயலிழக்க செய்தனர். இதையடுத்து அவ்வழியே ரத யாத்திரை மேற்கொள்ளவிருந்த பா.ஜ.க மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பாதுகாப்புடன் மாற்றுப் பாதையில் தனது பயணத்தை தொடர்ந்தார். இந்த சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பிரிவு போலீசார் குற்றவாளிகள் குறித்து ரகசிய தகவல்களை திரட்டி வருகின்றனர். இந்த வேளையில் தமிழக சட்டம், ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் நேற்று முன்தினம் விமானம் மூலம் மதுரை வந்து வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்தை ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதனிடையே வெடிகுண்டை செயலிழக்க வைத்த சிறப்பு சார்பு ஆய்வாளர் கண்ணனுக்கு 15 ஆயிரமும், தகவல் கொடுத்த ஆலம்பட்டி செல்வராஜூக்கு ரூ. 10 ஆயிரமும், திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டர் சதாசிவத்திற்கு ரூ. 10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக மதுரை எஸ்.பி. அஸ்ராகார்க் வழங்கி பாராட்டினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony