முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடல் கொள்ளையர் எதிர்ப்பு படை அமைக்க ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

திருவொற்றியூர், நவ.1 - கடல் கொள்ளையர்களை அடக்க சர்வதேச அளவில் கொள்ளையர்கள் எதிர்ப்பு படை அமைக்க ஐ.நா. அமைப்புடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்று கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். சென்னை துறைமுகத்தில் கடல் சிப்பந்திகள் நலக்குழு சார்பில் மாலுமிகள் நினைவு சிலைகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிலைகளை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்,

கப்பல் மாலுமிகள் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கப்பல் சிப்பந்திகளின் நலனுக்காக பங்கு நிதி ஒன்றினை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடல் வணிகத்துக்கு சவாலாக சிப்பந்திகளை தாக்கி விட்டு கடல் கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதுபோன்று சிறை வைக்கப்பட்ட 400 இந்திய சிப்பந்திகள் மீட்கப்பட்டுள்ளனர். 120 கடல் கொள்ளை சம்பவங்கள் இந்திய கடற்படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளன. 

கடல் கொள்ளை விபரீதங்களை தடுக்கும் விதமாக சர்வதேச கடல் கொள்ளையர் எதிர்ப்பு படை ஒன்றை அமைக்க ஐக்கிய நாடுகள் சபை தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் தேசிய கப்பல் சிப்பந்திகள் நல வாரிய உறுப்பினர் கஜநாதன், தொழிற்சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்