முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவை கிள்ளுக் கீரையாக நினைத்து விட வேண்டாம்

செவ்வாய்க்கிழமை, 1 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ.1 - சிரியாவை கிள்ளுக்கீரையாக நினைத்து விட வேண்டாம். சிரியாவில் நடக்கும் பூசலை சாக்காக வைத்துக் கொண்டு யாரும் தலையிட நினைத்தால் பெரிய பூகம்பம் வெடிக்கும் என்று மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார் அந்நாட்டு அதிபர் பஷார் அல் அஸ்ஸாத். சிரியாவில் இப்போது கடுமையான உள்நாட்டுபோர் நடக்கிறது. அதிபர் பதவி விலக வேண்டும். சிரியாவில் ஜனநாயக நடவடிக்கைகளை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் கடந்த 7 மாதங்களாக போராடி வருகின்றனர். ராணுவத்தை கொண்டு கிளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது அந்நாட்டு அரசு. 

கடந்த 7 மாதங்களாக நடந்து வரும் இந்த கிளர்ச்சி சமீபத்திய நாட்களாக தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிபர் லண்டன் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், எங்கள் மீது மேற்கத்திய நாடுகள் ராணுவ நடவடிக்கை எடுத்தால் பூகம்பம் வெடிக்கும். இன்னொரு ஆப்கானிஸ்தானை அவர்கள் சந்திக்க நேரிடும். ஜனநாயக உரிமைகளை கேட்கிறோம் என்ற பெயரில் மக்கள் வன்முறையில் இறங்குவதை அனுமதிக்க முடியாது. எங்களுடைய நாட்டை சிறுமைப்படுத்த நினைக்கும் சக்திகளுக்கு துரோகிகள் துணை போவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு மூக்கை நுழைத்தால் உடும்பை பிடித்த கதையாக முடிந்து விடும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்