முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹிலாரி தாயார் மரணம்: பாரக் ஒபாமா இரங்கல்

வியாழக்கிழமை, 3 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், நவ.3 - அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தாயார் டாரத்தி ரோதம் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 92. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தாயார் டாரத்தி ரோதம். தனது மகளுக்கு என்றுமே பக்கபலமாக இருந்தவர். கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று காலமானார். டாரதி ரோதம் கடந்த 1919 ம் ஆண்டு ஜூன் மாதம் 4 ம் தேதி சிகாகோவில் பிறந்தார். பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது அவருடன் சேர்ந்து பல நாடுகளில் சுற்றுப் பயணம் செய்தார். கடந்த 2000 ம் ஆண்டு கிளிண்டன் இந்தியாவுக்கு வந்திருந்த போது அவருடன் டாரத்தியும் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே போல் கிளிண்டனும் சேர்ந்து கடந்த 1998 ம் ஆண்டு சீனாவில் சுற்றுப் பயணம் செய்தார். டாரத்திக்கு ஏதாவது செய்ய விரும்புவர்கள் அவர் சிகிச்சை பெற்ற ஜார்ஜ் வாஷிங்டன் மருத்துவமனைக்கு நன்கொடை அளிக்குமாறு ஹிலாரி குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளனர். டாரத்தி ஒரு அருமையான பெண்மணி. அவரது மறைவு கிளிண்டன் குடும்பத்திற்கு பேரிழப்பு. அவர்களும், நானும் மிஷலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago