முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பச்சிளம் குழந்தையை ஆசிட் ஊற்றி குளிப்பாட்டிய நர்சுகள்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

லால்பாக், நவ.4 - மேற்கு வங்க மாநிலத்தில் பிரசவ மருத்துவமனைகளில் நர்சுகள், ஊழியர்கள் அலட்சியத்தால் குழந்தைகள் இறப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. பாடலான் மருத்துவமனையில் இன்குபேட்டர் கோளாறால் 12 குழந்தைகள் பலியானது. தொடர்ந்து கொல்கத்தா பி.சி.ராய் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் ஊழியர்களின் அலட்சியத்தால் 13 பச்சிளங் குழந்தைகள் இறந்தது.

இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் முர்சிபாத் மாவட்ட குழந்தைகள் மருத்துவமனையில் பச்சிளங் குழந்தையை நர்சு ஆசிட் ஊற்றி குளிப்பாட்டியதால் அக்குழந்தை பலியானது. இங்கு பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட சிகா பி.பி. என்ற பெண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் குழந்தை பிறந்தது. ஆனால் மறுநாள் திடீரென்று குழந்தை இறந்து விட்டதாக நர்சு தெரிவித்தார். உறவினர்கள் பார்த்த போது குழந்தையின் உடலில் கொப்பளங்கள் காணப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளர் சரஸ்வதிநாத் நடத்தினார். விசாரணையில் டெட்டால் என நினைத்து ஆசிட்டை ஊற்றி பிறந்த குழந்தையை குளிப்பாட்டியது தெரியவந்தது. ஆனால் குழந்தையின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு இறந்து விட்டது. இதற்கிடையே குழந்தையின் தாயையும் ஊழியர்கள் கவனிக்காததால் அவரும் இறந்து போனார். அலட்சியமாக செயல்பட்ட நர்சுகள், ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்கிடையே நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் பிரசவ ஆஸ்பத்திரிகளில் குழந்தைகளை கவனிக்க விசேஷ பிரிவு தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இங்கு எடை குறைவாக பிறக்கும், குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் பராமரிக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்