முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம்: மம்தா

ஞாயிற்றுக்கிழமை, 6 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா, நவ.6 - மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எச்சரித்துள்ளார். பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டதை அடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேற்கு வங்க முதல்வரான மம்தா, கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

நாங்கள் ஆதரவை வாபஸ் பெற்றால் மத்திய அரசு கவிழ்ந்து விடும். எனினும் பிரதமருக்கு இன்னும் நாங்கள் வாய்ப்பு வழங்குகிறோம். பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக அவர் எங்களுடன் பேச வேண்டும். வரும் 8 ம் தேதியில் இருந்து 10 ம் தேதிக்குள் பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். அதே போல மத்திய அரசு எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் அதற்கு முன் எங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். முக்கியமாக பெட்ரோல் விலை உயர்வு என்ற முக்கியமான முடிவை பிரதமர் வெளிநாடு சென்றுள்ள போது எடுத்துள்ளனர். இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு அவசரமாக கூடி பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மத்திய அரசில் இருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளது. இதுவரை பல விஷயங்களில் சகிப்பு தன்மையுடன் நடந்து கொண்டுள்ளோம். காங்கிரஸ் கட்சியை நான் எந்த விதத்திலும் சார்ந்திருக்கவில்லை. தொடர்ந்து பெட்ரோல் விலையை உயர்த்தி வருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது மக்களை பெரிதும் பாதிக்கும். 

இப்போதைய விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை தொடர்ந்து உயர்த்துவதைத்தான் நடைமுறையாக வைத்துள்ளனர். இதனை ஏற்க முடியாது. பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக எங்கள் கட்சியின் தலைவர் முகுல்ராய் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பேசினார். ஆனால் இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று பிரணாப் கூறி விட்டார் என்றார் மம்தா. 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு இல்லையென்றால் மத்திய அரசு கவிழ்ந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago