மத்திய அரசு கூறினால் விலை உயர்வு ரத்து!

Image Unavailable

 

புது டெல்லி, நவ.6 - மத்திய அரசு அறிவுறுத்தினால்தான் பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.80 உயர்த்தப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் தலைவர் புடோலா செய்தியாளர்களிடம் கூறும் போது, 

கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல் விலை நிர்ணயத்தை பொதுத்துறை நிறுவனங்களே மேற்கொள்ளலாம் என அரசு அனுமதியளித்தது. எனினும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமையாளர்கள் என்ற முறையில் விலை உயர்வை ரத்து செய்யுமாறு அறிவுறுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்போதைய விலை உயர்வை ரத்து செய்யும் திட்டம் ஏதுமில்லை. அரசு அறிவுறுத்தினால் மட்டுமே விலை உயர்வை ரத்து செய்வோம் என்றார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையில் எங்களுக்கு ரூ. 2.468 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை ஈடுசெய்வதற்கு பெட்ரோல் விலை உயர்வை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ