முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

90 நொடிகளில் பின்லேடனை கொன்ற படைகள்

சனிக்கிழமை, 5 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

லண்டன், நவ.6 - பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டில் அமெரிக்க படைகள் இறங்கிய 90 நொடிகளுக்குள் அவர் கொல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக 45 நிமிட துப்பாக்கி சண்டைக்கு பின்தான் பின்லேடன் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் கடற்படை கமாண்டர் சுக்பாரர் புத்தகம் ஒன்று எழுதியுள்ளார். அதில் எங்கள் குழுவினர் தரை வழியாக பின்லேடன் பதுங்கியிருந்த வீட்டுக்குள் நுழையவில்லை. ஹெலிகாப்டரில் இருந்து வீட்டின் மேல் பகுதி வழியாக உள்ளே சென்றோம். அடுத்த 90 நொடிகளில் பின்லேடன் கொல்லப்பட்டு விட்டார். மொத்தம் 4 சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினோம். பின்லேடனின் மனைவி அமால் முதலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்தார். பின்னர் நாங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்திய போது அவர் இறந்து விட்டார். பின்லேடன் பதுங்கியிருந்த இடத்தை எளிதில் கண்டுபிடிக்க உதவியாக இருந்தது அவருக்கு வந்த கொரியர்கள்தான். அல்கொய்தாவின் துணை தலைவராக இருந்து ஜவாஹிரிதான் தொடர்ந்து பின்லேடனுக்கு தபால்களை அனுப்பி வந்தார். அதனை வைத்து பின்லேடன் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது என்று பாரர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்