அத்வானி ரதயாத்திரை குஜராத் சென்றடைந்தது - மோடி வரவேற்பு

Image Unavailable

புதுடெல்லி,நவ.- 7 - ஊழலுக்கு எதிராக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை நடத்திவருகிறார். நேற்று அத்வானி ரதயாத்திரையில் 27-வது நாளாகும். அவர் குஜராத் மாநிலத்துக்கு சென்றார். அவருக்கு முதல்வர் நரேந்திரமோடி வரவேற்றார். கடந்த மாதம் 11-ம் தேதி இந்த ரதயாத்திரை பீகார் மாநிலத்தில் தொடங்கியது. பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ரதயாத்திரையை கொடி அசைத்து தொடங்கினார். உத்தரபிரதேசம், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் ரதயாத்திரையை முடித்து விட்ட அத்வானி நேற்றுமுன்தினம் யூனியான்பிரதேசத்துக்கு சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். நேற்று அவர் குஜராத் மாநிலத்துக்கு சென்றார். பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அத்வானி குஜராத் சென்றுள்ளார். அத்வானியை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி  வரவேற்றார்.  குஜராத்தில் அத்வானி 2 நாட்கள் ரதயாத்திரை மேற்கொள்வார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ