அன்னா ஹசாரேவுக்கு புதிய சிக்கல்!-பாரூலேகர்

Image Unavailable

 

புது டெல்லி, நவ. - 7 - கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், பிரசாந்த் பூஷன் ஆகியோரையும், அவர்களுடைய ஆதரவாளர்களையும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து விலக்க விரும்பினார் ஹசாரே என்று புதிய பூதம் கிளம்பியிருக்கிறது.  இந்த மூவரின் பாசிச போக்கு பிடிக்காமல் அவர்களை விலக்கவும், தன்னுடைய இயக்கத்தை உளப்பூர்வமாக எந்தவித பிரச்சினையுமின்றி, பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஆதரிக்கும் மக்களை பிரதிநிதிகளாக கொண்டு தேசிய அளவில் குழு அமைக்கவும் ஹசாரே விரும்பினார் என்று பாரூலேகர் என்ற பத்திரிக்கையாளர் இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.  ஹசாரேவின் கருத்துக்களை இணையதளத்தில் பரப்பியது தான்தான் என்று பாரூலேகர் கூறுகிறார். ஹசாரேவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், இந்த மூவரின் செயல்களால் விரக்தியடைந்து தன்னை தனியாக அழைத்து இந்த மூவரையும் விலக்கி விட முடிவு செய்திருப்பதால் குழு பெரிதாகிறது என்ற தகவலை இணையதளத்தில் சேர்த்து விடுமாறு ஹசாரே தன்னிடம் கூறியதாக பாரூலேகர் தெரிவித்தார். ஆனால் இதை ஹசாரே மறுத்துள்ளார். பாரூலேகர் யார் என்றே தனக்கு தெரியாது. அவரை பார்த்ததும் இல்லை. பேசியதும் இல்லை. அப்படியிருக்க என்னுடைய ஆதரவாளர்களை நீக்கப் போவதாக அவரிடம் சொல்லியிருப்பேனா என்கிறார் ஹசாரே. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ