தேசிய புலனாய்வு குழுவை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டம்

Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 7- தேசிய புலனாய்வு குழுவை மேலும் விரிவுபடுத்தவும் 3 புதிய அலுவலகங்களை  அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய புலனாய்வு குழு  அமைக்கப்பட்டது. இக்குழுவில் இப்போது சுமார் 400 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த புலனாய்வு குழுவை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதன்படி மேலும் 3  புதிய அலுவலகங்களை திறக்க தேசிய புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து  ஒரு புதிய தேசிய புலனாய்வு குழுவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக பாராளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு  தேசிய புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.  இந்த புலனாய்வு குழு தீவிரவாதம் தொடர்பான வழக்கு விசாரணைகளை மட்டுமே நடத்தும். இந்த புலனாய்வு குழுவில்  தற்போது 400 பேர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.  இக்குழுவில் மேலும் 500 பேரை வேலைக்கு அமர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதன் மூலம் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 900 ஆக  அதிகரிக்கப்படும். லக்னோ, கொச்சி, மும்பை ஆகிய இடங்களில்  மேலும் 3 புதிய அலுவலகங்களை அமைக்கவும் முடிவு  செய்யப்பட்டுள்ளது. இந்த  தகவலை தேசிய புலனாய்வு குழுவின் அதிகார வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ