முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொலைபேசி விவகாரம்: மத்தியஅரசு விளக்கமளிக்க வேண்டும்-கெஜ்ரிவால்

திங்கட்கிழமை, 7 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

நாகபுரி, நவ.- 8 - அன்னா ஹசாரே இயக்கத்தை சேர்ந்தவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,  ஊழலுக்கு எதிராக ஜனலோக்பால் மசோதா கொண்டு வரப் போராடும் ஹசாரே குழுவினர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனரா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். எங்கள் குழு உறுப்பினர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டது குறித்து மத்திய உள்துறை செயலர் விளக்கமளிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பு கருதி தேச விரோத செயல்களில் ஈடுபடுவோரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் எங்களது தொலைபேசிகள் ஏன் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என்பது புரியவில்லை. ஊழலுக்கு எதிரான எங்களுக்கு ஆதரவளிக்க விரும்பும் அனைவரையும் வரவேற்போம். அது காங்கிரசாக இருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பாக இருந்தாலும் அவர்களை வரவேற்போம். எங்களது இலக்கு ஜனலோக்பால் மசோதாதான் என்றார் கெஜ்ரிவால்.
இந்த நிலையில் கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களுக்கும், கண்டநாதம் என்ற அமைப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 20 பேர் கொண்ட கும்பல் கெஜ்ரிவாலின் காரை முற்றுகையிட்டது. கூட்ட அறை முன் கறுப்பு கொடியை கட்டியதுடன் கெஜ்ரிவாலுக்கு எதிராக அவர்கள் கோஷங்களையும் எழுப்பினர். அறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலின் ஆதரவாளர்களுடன் அவர்கள் மோதலில் ஈடுபட்டனர். அந்த அமைப்பின் இச்செயலுக்கு கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்தார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்