முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் மும்பை வந்தார்

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை, நவ. - 9 - அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வில்லியம் புஷ் திங்கட்கிழமை மாலையில் மும்பை வந்து சேர்ந்தார். அவரது இந்த பயணம் ஒரு தனிப்பட்ட பயணமாகும்.  தெற்கு மும்பையில் பிரபலமான தாஜ்மஹால்  ஓட்டலில் அவர் தங்கியுள்ளார். முன்னதாக, முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது குழுவினரும், தனியார் ஜெட் விமானம் மூலம் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்கினார்கள். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் அவரும், அவரது குழுவினரும் தாஜ் ஓட்டல் புறப்பட்டுச் சென்றனர்.  சில தனிப்பட்ட காரியங்களுக்காக ஜார்ஜ் புஷ் மும்பை வந்திருப்பதாக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மும்பையில் தெரிவித்தார். தாஜ் ஓட்டலில் இன்று புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் ஜார்ஜ் புஷ்சும், அவரது குழுவினரும் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது என போலீசார் தெரிவித்தனர். ஜார்ஜ் புஷ் தங்கியுள்ள ஓட்டலுக்கு வெளியே போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். ஜார்ஜ் வில்லியம் புஷ் கடந்த 2001 முதல் 2009 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். இந்தியா, அமெரிக்கா இடையே ஏற்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு பிள்ளையார்சுழி போட்டவர் இந்த ஜார்ஜ் புஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ஜார்ஜ் புஷ்சுக்கு தற்போது 65 வயதாகிறது. மும்பையில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஜார்ஜ் புஷ் இன்றே அமெரிக்கா திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்