முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் இரும்பு பாலம் திறப்பு

புதன்கிழமை, 9 நவம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

சபரிமலை, நவ. - 9 - சபரிமலையில் கட்டப்பட்ட இரும்புப் பாலம் மற்றும் புதிய சாலையை கேரள மாநில முதல்வர் உம்மன்சாண்டி திறந்து வைத்தார்.  சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு திருவிழா காலங்களில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு இரும்புப் பாலமும், புதிய சாலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த சாலையை கோயிலில் இருந்து வழிபாடு முடிந்து திரும்பும் பக்தர்கள் பன்படுத்தலாம். 40 மீட்டர் நீளமும், 3.3. மீட்டர் அகலமும் உள்ள இந்த பாலத்தை இந்திய ராணுவத்தின் எம்.இ.ஜி. பிரிவு அமைத்துள்ளது. இரும்புப் பாலத்தில் இருந்து கோயிலை இணைக்கும் 428 மீட்டர் தூர சாலையை அந்த மாநில காவல் துறை குடியிருப்பு கட்டுமான கழகம் ஏற்படுத்தியுள்ளது. இரும்புப் பாலத்தை 25 நாட்களுக்குள் ராணுவ பொறியாளர்கள் அமைத்தனர். இதற்கான கட்டுமான பொருட்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டன. இரும்புப் பாலத்தின் திறப்பு விழாவில் பேசிய முதல்வர் உம்மன் சாண்டி, இந்த பாலம் குறுகிய காலத்தில் திட்டமிட்டு கட்டப்பட்டதாகவும், பாலத்தை அமைக்க மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அந்தோணி பெரிதும் உதவியாகவும் குறிப்பிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்