முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 ஜி வழக்கு: சுவிஸ் நிறுவனத்திடம் விவரம் கோருகிறது சி.பி.ஐ.

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, நர. - 10 - 2 ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்துடன் தொடர்புடைய சுவிஸ் நிறுவனத்திடம் முககிய விவரங்களை அளிக்குமாறு சி.பி.ஐ. கோரியுள்ளது. 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாக கூறப்படும் ஸ்வான் நிறுவனம் இப்போது எடிசலாட் என்று அழைக்கப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த இந்நிறுவனத்தில் சுவிட்சர்லாந்தை சேர்நத பெல்லோர் குரூப் நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.  இந்த தொகை 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொடர்புடைய பணம் என்றும் எடிசலாட் நிறுவனத்தில் அரசு அதிகாரிகள் சிலர் ப8குதாரர்களாக இருப்பதாகவும் சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 2 ஜி வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் சுவிஸ் அரசு அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதில்  கிபல்வோர் குரூப் நிறுவனத்தின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், பயனாளிகள் குறித்த விவரங்களை அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வங்கி கணக்குகள், நிதி பரிமாற்றங்கள் குறித்த விவரங்களை அளிக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்