முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங் மாலத்தீவு புறப்பட்டு சென்றார்

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, நவ.- 10 - தெற்காசிய  நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மாலத்தீவு புறப்பட்டு  சென்றார். இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான்,  மாலத்தீவு,  ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின்  கூட்டமைப்பான  சார்க் அமைப்பின் உச்சி மாநாடு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  மாலத்தீவில் உள்ள அட்டு  தீவில்  நடைபெற உள்ளது.  இந்த உச்சி மாநாட்டில் இந்த 8 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். இந்த இரண்டு நாள் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் மன்மோகன் சிங் மாலத்தீவு  தலைநகர் மாலேவுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அங்கு  மாலத்தீவு ஜனாதிபதி முகம்மது நஷீத்தை வருகிற சனிக்கிழமை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேசுகிறார். இந்த பயணத்தின்போது பிரதமர் மன்மோகன் சிங் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஜா கிலானியை  சந்தித்து பேச இருக்கிறார். சார்க் உச்சி மாநாட்டில் தெற்காசிய  வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்க் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்து  விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. டெல்லியிலிருந்து தனி விமானத்தில் மாலத்தீவு  சென்றுள்ள மன்மோகன் சிங்குடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவினரும்  சென்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்