முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ நடவடிக்கைகளே இல்லாத பகுதிகளில் ராணுவ பாதுகாப்பு எதற்கு?- உமர் அப்துல்லா

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, நவ.- 10 - பல ஆண்டுகளாக ராணுவ நடவடிக்கைகளே இல்லாத பகுதிகளில்  ஆயுதப்படை சிறப்பு  பாதுகாப்பு சட்டம் எதற்கு? என்று காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஜம்முவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், பல ஆண்டுகளாக ராணுவ நடவடிக்கை  மேற்கொள்ளப்படாத பகுதிகளிலும்கூட ஆயுதப்படை சிறப்பு பாதுகாப்பு சட்டம்  போடப்பட்டுள்ளது. இது எதற்கு என்பதுதான் எனது கேள்வி. இந்தப் பகுதிகளில் இந்த சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்பதுதான்  எனது கோரிக்கை என்று அவர் கூறினார்.
பாரமுல்லா,  சோப்ரே, குப்வாரா  போன்ற பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை . அப்படி இருக்கும்போது இந்த பகுதிகளில்  இந்த  சட்டம் எதற்கு என்பதுதான் எங்கள் கேள்வி என்றும் அவர் கூறினார். ராணுவமே செயல்படாத இது போன்ற பகுதிகளில் இந்த  சட்டத்தை நீக்குவதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இந்த  சட்டத்தை இதுபோன்ற பகுதிகளில்  இருந்து திரும்பப் பெற வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார். இப்போது இந்த சட்டத்தினால் சற்று சிரமம் இருக்கும். ஆனால் இறுதியில் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைத்தே தீரும் என்றும் அவர் கூறினார். இந்த சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்பதும் இது  நாடு முழுவதும் சில முக்கியமான பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்