முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மைக்கேல் ஜாக்சன் மரணம்: குடும்ப டாக்டர்தான் குற்றவாளி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

லாஸ்ஏஞ்சல்ஸ், நவ. - 10 - பிரபல அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் அவரது டாக்டர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.  பிரபல அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009 ல் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது இறப்புக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மைக்கேல் ஜாக்சனின் குடும்ப மருத்துவர் கான்ரேட் முர்ரே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக லாஸ்ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்றது. உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த மைக்கேல் ஜாக்சனுக்கு அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து தரப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் அவரது குடும்ப மருத்துவர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டது. மருத்துவர் கான்ரேட் முர்ரேவுக்கு வழங்கப்படும் தண்டனை விபரம் வரும் 29 ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி மைக்கேல் பாஸ்டர் தெரிவித்தார். மருத்துவர் முர்ரேவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவரது மருத்துவ உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்